This Article is From Sep 24, 2018

‘பாகிஸ்தான் சூட்சமமாக நடந்துகொள்ள முயன்றால்…’- ஐ.நா கூட்டம் குறித்து இந்தியா

ஐ.நா சபை பொதுக் கூட்டத்தில் வரும் சனிக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேசுவார்கள்

‘பாகிஸ்தான் சூட்சமமாக நடந்துகொள்ள முயன்றால்…’- ஐ.நா கூட்டம் குறித்து இந்தியா

இந்தியா சார்பில் இந்தக் கூட்டத்தில் பங்கெடுக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியூயார்க் சென்றுள்ளார்

New York:

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐ.நா சபையின் பொதுக் கூட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. உலக அளவில் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கபடும். இந்நிலையில், இந்த கூட்டத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசின் பிரதிநிதிகள் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் சமீபத்தில் ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில், 3 காவல் துறையினரை தீவிரவாதிகள் கடத்திக் கொன்றனர். அதேபோல தீவிரவாதி புர்ஹான் வாணிக்கு ஆதரவாக இருக்கும் நபர்களை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த 2 விஷயங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுடன் நடத்தயிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா. ‘பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் மோசமான எண்ணங்கள் வெளிவந்துள்ளது. அவர்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்கிறோம்’ என்று இந்தியா தெரிவித்தது.

syed akbaruddin

ஐ.நா-வுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன்

இதற்கு இம்ரான் கான் ட்விட்டரில், ‘அமைதி பேச்சுவார்த்தைக்கு நான் விடுத்த அழைப்புக்கு எதிர்மறையாக பதில் அளித்துள்ளது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எதிர்காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் குறுகிய எண்ணங்களுடன் செயல்படும் பலரை என் வாழ்நாள் முழுதும் நான் பார்த்து வந்திருக்கிறேன்’ என்று பதிவிட்டார்.

இரு நாட்டுத் தரப்புகளும் சமீபத்தில் இப்படி பேசிக் கொண்டது ஐ.நா சபை கூட்டங்களிலும் எதிரொலிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஐ.நா-வுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன், ‘பாகிஸ்தான் சூட்சமமாக நடந்து கொள்ள முயன்றால் அதற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இதைப் போன்ற பல சந்தர்பங்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம். இம்முறையும் அதை சாதுர்யமாக அணுகுவோம்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஐ.நா சபை பொதுக் கூட்டத்தில் வரும் சனிக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேசுவார்கள்.

.