This Article is From Sep 16, 2019

IBPS RRB Results: ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! தெரிந்துகொள்வது எப்படி?

IBPS RRB results: ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி தேர்வு முடிவுகளை ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

IBPS RRB Results: ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! தெரிந்துகொள்வது எப்படி?

ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி தேர்வு முடிவுகளை ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

New Delhi:

ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி அதிகாரி ஸ்கேல் 1 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனை ஐ.பி.பி.எஸ் உறுதிபடுத்தியுள்ளது. ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி தேர்வு முடிவுகளை ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகிறது. 

ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி தேர்வு முடிவுகள்:

இன்ஸ்ட்டிட்டியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (IBPS) எனப்படும் நிறுவனம், இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டு ஊரக வங்கிகளான ஆர்ஆர்பி ஆபீஸர் ஸ்கேல் 1 (RRB Officer Scale 1), பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது.

ஆபீசர் ஸ்கேல் 1 பணிக்கான முதன்மை தேர்வுகள் கடந்தாண்டு ஆகஸ்ட் 3,4, மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. ஆபீசர் ஸ்கேல் 1 பதவிக்கு, நடத்தப்படும் எழுத்து தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் பிரதான தேர்வுக்கான விண்ணப்பதாரர்களை பட்டியலிட பயன்படுத்தப்படும், இருப்பினும் இந்த மதிப்பெண்கள் இறுதி முடிவுக்கு கருதப்படாது.

ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி அதிகாரி முதன்மை தேர்வு முறை:

இந்த பிரதான தேர்வில், விண்ணப்பதாரர்கள் திறனாய்வு, கணினி, பொது விழிப்புணர்வு, ஆங்கிலம் அல்லது இந்தி மொழி மற்றும் அளவு திறன் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு இருக்கும்.

தேர்வரால் குறிக்கப்படும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் எதிர்மறை மதிப்பெண்களுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும், அந்த கேள்விக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மதிப்பெண்ணில் நான்கில் ஒரு பங்கு கழிக்கப்படும்.

இந்த தேர்வுடன் ஆபீஸ் அசிஸ்டெண்ட் பணிக்கான முதன்மை தேர்வுகளும் ஆகஸ்ட் 25-ஆம் தேதியில் நடத்தப்பட்டது.

இந்த அனைத்து பதவிகளுக்குமான தற்காலிக ஒதுக்கீடு 2020 ஜனவரியில் முடிவடையும்.

இதில், ஐபிபிஎஸ் அதிகாரி அளவு 1, அலுவலர் அளவு 2, அலுவலர் அளவு 3 மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில், அதிகாரி அளவு 2 மற்றும் 3 பதவிகளுக்கு மட்டும் ஒரு தேர்வு இருக்கும், மற்ற பதவிகளுக்கு இரண்டு தேர்வுகள் இருக்கும். அலுவலக உதவியாளர் பதவிக்கு எந்த நேர்காணலும் இருக்காது.

இந்நிலையில், ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளை ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here for more Jobs News

.