This Article is From Mar 08, 2019

''130 கோடி மக்களும் எனது ஆதாரங்கள்'' - விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பேச்சு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரும், எதிர்க்கட்சியினரும் விமானப்படை தாக்குதல் குறித்த ஆதாரங்களை கேட்ட நிலையில் மோடி பேசியுள்ளார்.

''130 கோடி மக்களும் எனது ஆதாரங்கள்'' - விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பேச்சு

பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மோடி

Ghaziabad:

பாலகோட் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி ஆதாரம் கேட்டு வரும் நிலையில் 130 கோடி மக்களும் எனது ஆதாரங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாகிஸ்தானை புகழ்வதை நிறுத்துங்கள் என்றும் மோடி கண்டித்துள்ளார். 

புல்வாமா தாக்குதலில் துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கின. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மாதம் 26-ம்தேதி இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தின. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பான ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், மத்திய அரசு தரப்பில் ஆதாரங்கள் ஏதும் வெளியாகவில்லை. சில நாட்களுக்கு முன்பு சாட்டிலைட் படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது. 

இதேபோன்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரும் ஆதாரங்களை வெளியிடுமாறு கேட்டிருந்தனர். இந்த நிலையில் காஜியாபாத் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பாலகோட் தாக்குதலுக்கு 130 கோடி மக்களும் என்னுடைய ஆதாரங்கள். பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். 

.