“2021-ல நான் சி.எம் ஆகலாம்னு பிளான் பண்ணியிருக்கேன்!”- வடிவேலு ஓப்பன் டாக்

நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வந்தால் செயல்படுத்தப் போகும் 3 திட்டங்கள் குறித்துப் பேசினார்.

“2021-ல நான் சி.எம் ஆகலாம்னு பிளான் பண்ணியிருக்கேன்!”- வடிவேலு ஓப்பன் டாக்

ரஜினியின் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு தமிழக அளவில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில்...

ஹைலைட்ஸ்

  • சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்
  • நிருபர்கள் மத்தியில் தன் அரசியல் திட்டம் குறித்துப் பேசினார் ரஜினி
  • '3 அம்ச திட்டத்தை' பற்றி விளக்கினார் ரஜினிகாந்த்

தனது அரசியல் எதிர்காலத் திட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று பேசியுள்ள நிலையில், நடிகர் வடிவேலு, ‘வரும் 2021 ஆம் ஆண்டு நான் சி.எம் ஆகலாம்னு பிளான் பண்ணியிருக்கேன்,' என்று தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணியன் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு வடிவேலு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ரஜினி சார் அரசியலுக்கு வருவாரா என்று உங்களுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. ஏன், அவருக்கே தெரியாது. அவர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்,” என்றார் கிண்டலாக.

தொடர்ந்து அவர், “2021 ஆம் ஆண்டு நான் சி.எம் ஆகலாம்னு பிளான் பண்ணியிருக்கேன். நான் எலெக்‌ஷன்ல நின்னா நீங்கல்லாம் ஓட்டுப் போடுவீங்கள்ள. அப்ப நான்தான் சி.எம்-மு,” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். 

நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வந்தால் செயல்படுத்தப் போகும் 3 திட்டங்கள் குறித்துப் பேசினார். 

ரஜினி, “முதலாவது திட்டம், தேவையில்லாத கட்சிப் பதவிகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது. தேர்தலுக்கு மட்டும் பதவிகளை உருவாக்கி, ஆட்சிக்கு வந்தால் அந்தப் பதவிகள் நீக்குவது. பதவிகளில் அதிகம் பேர் நியமிக்கப்பட்டால் அது ஊழலுக்கு வழி வகுக்கிறது.

இரண்டாவது திட்டம், 50 வயதுக்குக் கீழே இருக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பான்மையான வாய்ப்புகளைக் கொடுப்பது. 

மூன்றாவது திட்டம், கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை,” என்று திட்டங்களை அறிவித்தார். ரஜினியின் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு தமிழக அளவில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், வடிவேலுவும் அது குறித்து நகைச்சுவையாக பேசியுள்ளார்.