”நான் எனது நண்பன் அருணை இழந்துவிட்டேன்” - பிரதமர் மோடி உருக்கம்

அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் பிரதமர் அவசரமாக பயணத்தை முடித்து திரும்ப வேண்டாமெனவும் முக்கிய வேலைகளை முடித்து விட்டு வரவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

இன்று எனது நண்பர் அருணை இழந்து விட்டேன் -மோடி (File)


Manama: 

பிரதமர் நரேந்திர மோடி பஹ்ரைனில் நடந்த நிகழ்ச்சியில் தனது நண்பர் அருண் ஜெட்லியை நினைவு கூர்ந்தார். 

இந்திய சமூகத்தை சேர்ந்த 15,000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபையில் உரையாற்றியவர் முன்னாள் மத்திய அமைச்சரின் மரணம் குறித்த தனது வேதனையை வெளிப்படுத்தினார். ஜெட்லியுடனான நீண்டகால தொடர்பை நினைவுபடுத்துகிறார்.

“நான் கடமைக்கு கட்டுப்பட்ட ஒரு மனிதன். பஹ்ரைனில் பண்டிகைகளின் சூழல் இருக்கும் நேரத்தில், நான் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கிறேன். பொது வாழ்க்கையில் ஒன்றாக இருந்த நண்பன், எப்போதும் உடன் இணைந்திருந்தேன், அவருடன் இணைந்து போராடினேன், கனவு கண்டேன், கண்ட கனவை நிறைவேற்றினேன். அந்த நண்பர் அருண் ஜெட்லி இன்று காலமானார்” என்று பிரதமர் மோடி கூறினார்.

எனது நண்பர் இறந்துவிட்டார். நான் இங்கு இருக்கிறேன் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் சுஷ்மா சுவராஜ்ஜை இழந்தோம். இன்று எனது நண்பர் அருணை இழந்து விட்டேன்” என்று அவர் கூறினார்.

பிரதமர் பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுபயணத்தில் மூன்றாம் கட்டத்தில் உள்ளார்.

அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் பிரதமர் அவசரமாக பயணத்தை முடித்து திரும்ப வேண்டாமெனவும் முக்கிய வேலைகளை முடித்து விட்டு வரவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................