This Article is From Jan 02, 2019

ரோந்து பணிகளில் கலக்கும் பெண் காவலர்கள்! ஐதராபாத் போலீசாரின் முற்போக்கு நடவடிக்கை!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ஐதராபாத் போலீசார் ஒரு புதிய முயற்சி!

ரோந்து பணிகளில் கலக்கும் பெண் காவலர்கள்! ஐதராபாத் போலீசாரின் முற்போக்கு நடவடிக்கை!

காவல்துறையில் சேர பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

Hyderabad:

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ஐதராபாத் போலீசார் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளனர். ‘வுமன் ஆன் வீல்ஸ்' என்னும் இந்த திட்டத்தின் படி பெண் காவலர்கள் நகரத்தின் சாலைகளில் ரோந்து பணிகளில் அமர்தப்பட்டுள்ளனர்.

‘காவல்துறையில் சேரும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளில் பணி செய்யும் வாய்பை கொடுத்துள்ளோம், இந்த பயிற்சி தொடரும்போது பெண் காவலர்கள் ஆண் காவலர்களுக்கு இணையாக பணியில் அமர்தப்படுவார்கள்.

மேலும் இப்பொழுது இருக்கும் பெண் காவலர்கள் தாங்கள் ஒருபோதும் ஆண் காவலாளிகளுக்கு சலித்தவர்கள் இல்லை என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது' என ஐதராபாத்தின் கூடுதல் ஆணையர் ஷிக்ஷா கொயல் தெரிவித்தார்.

20 குழுக்களை கொண்ட பெண் காவலர்கள், இருசக்கர வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தினமும் சுமார் 100 தொலைப்பேசி வாயிலாக புகார்கள் வருவதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இரண்டு மாத வாகனம் ஓட்டும் பயிற்சி மற்றும் இதர பயிற்சிகளுடன் இந்த புதிய குழுக்கள் களம் இறங்கி இருப்பதாகவும், சாலைகளில் பெண் காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என இந்த புதிய முயற்சி குறித்து ஆணையர் தகவல் அளித்தார்.

.