பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஐடி பெண்!

பெண்ணுக்கு பீடாவில் மயக்க போதை மருந்தை வைத்து அளித்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஐடி பெண்!

The accused allegedly also threatened to post their intimate pictures and videos on social media

ஹைலைட்ஸ்

  • ஃபேஸ்புக் மூலம் காதலில் விழுந்த ஹைதராபாத் பெண்
  • திருமணமான ஆண் மயக்க மருந்து கொடுத்து பாலியல் கொடுமை
  • உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறை
Hyderabad:

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் நண்பருடன் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். ஆனால், அவரை காதல் வலையில் வீழ்த்திய நபர் ஏற்கனவே திருமணமானவர். பீடா கடை உரிமையாளரான அவர் அந்தப் பெண்ணுக்கு பீடாவில் மயக்க போதை மருந்தை வைத்து அளித்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

இதனால், கர்ப்பமடைந்த அப்பெண்,  தன்னைத் திருமணம் செய்ய சொல்லி அந்நபரை வற்புறுத்தி உள்ளார். இதற்கு அந்நபர் மறுத்ததால் அப்பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். 

இந்த ஐடி பெண்ணின் புகாரின் அடிப்படையில் அந்த பீடா கடை உரிமையாளர் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த பெண்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உபேந்திரா என்ற கைதான அந்த நபர் ஐபிசி செக்‌ஷன் 376 மற்றும் 417 –ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.