அதிக இரைச்சலான நகரங்களின் பட்டியலில், ஹைதரபாத் மூன்றாம் இடம்

தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் ஒலி மாசடைந்த மெட்ரோ நகரங்கள் பட்டியலில், மூன்றாம் இடத்தில் உள்ளது என ஏஎன்ஐ செய்து ஊடக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிக இரைச்சலான நகரங்களின் பட்டியலில், ஹைதரபாத் மூன்றாம் இடம்

ஹைலைட்ஸ்

  • ஒலி மாசுபெற்ற நகரங்களில் ஹைதராபாத் மூன்றாவது இடம்
  • காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது
  • இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லத் திட்டம்
Hyderabad:

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் ஒலி மாசடைந்த மெட்ரோ நகரங்கள் பட்டியலில், மூன்றாம் இடத்தில் உள்ளது என ஏஎன்ஐ செய்து ஊடக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காற்று மாசடைந்த முதல் பத்து மெட்ரோ நகரங்களின் பட்டியலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களாக, அதிகரித்து வரும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை, தேவையற்ற முறையில் வாகனத்தின் ஒலி எழுப்புதல் போன்ற காரணங்களினால், நகரத்தில் ஒலி இரைச்சல் அதிகமாகியுள்ளன.

மாசுக் கட்டுபாட்டு வாரியம், நகரத்தின் பல இடங்களிலும் ஒலி இரைச்சல் கண்காணிப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில், நகரத்தின் ஒலி இரைச்சல் எல்லையை மீறி சென்று கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளனர்.

தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட 2017ம் ஆண்டு பதிவில், சென்னை நகரில் இரவு நேரங்களில் அதிக ஒலி இரைச்சல் இருப்பதாகவும், அடுத்தபடியாக லக்னோ, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் இருந்தன.

ஹைதராபாத் நகரித்தில் உள்ள ஒலி இரைச்சலை கட்டுக்குள் கொண்டு வர பணிகள் மேற்கொண்டுள்ளதாகவும், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு செல்ல பிரச்சாரங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர், திரு. அணில் குமார், கூறினார். 

"தேவையற்ற வகையில் ஒலி இரைச்சல் ஏற்படுத்துபவர்ளின் மிது நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

அளவுக்கு அதிகமான ஒலி இரைச்சல் இருப்பதினால், மனித உடலுக்கு தீயவிளைவுகள் ஏற்படும் எனவும், செவி கேட்பதில் பிரச்சனைகள் வரலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒலி இரைச்சல் பிரச்சனைகள் குறித்த சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தி. கடின விதிமுறைகள் கொண்டு வருவதனால், ஒலி இரைச்சலைக் குறைக்கலாம்.