This Article is From Aug 20, 2019

வீட்டின் மேற்கூரையிலிருந்து படுக்கையில் விழுந்த மலைப்பாம்பு : புகைப்படங்கள் உள்ளே

மலைப்பாம்பு கைப்பற்றப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது.

வீட்டின் மேற்கூரையிலிருந்து படுக்கையில் விழுந்த மலைப்பாம்பு : புகைப்படங்கள் உள்ளே

புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டது

நம் வீட்டில் சுவரில் பல்லி ஊர்ந்து கொண்டிருந்தால் அதைப் பார்த்து பயந்து அலறி அதை விரட்டி விட்டுத்தான் மறு வேலை பார்ப்போம். இங்கு ஒருவீட்டில் சீலிங்கில் பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டுள்ளது. இதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் பயத்தில் நடுக்கம் தொடங்கி விடுகிறதல்லவா…இங்கு ஒரு குடும்பம் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளது என்றால் நம்புவீர்களா நம்பித்தான் ஆக வேண்டும். 

குயின்ஸ்லாந்தை தலைமையகமாகக் கொண்ட பாம்பு மீட்பு சேவை மையம் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவில், மலையில் உள்ள கிளாஸ் கவுஸ் வீட்டினுள் படுக்கையறையில் உள்ள லைட்டிங்கில் மலைப்பாம்பு ஒன்று இறங்கியுள்ளது. அந்த லைட்டிங் அமைப்பினால் மலைப்பாம்பின் எடையை தாங்க முடியாமல் மலைப்பாம்பு படுக்கையில் விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அந்த சம்பவம் நடக்கும் போது படுக்கையில் யாரும் இல்லை. 

படுக்கையில் கிடக்கும் பாம்பின் புகைப்படத்தை பகிர்ந்து இந்த பதிவினை எழுதியிருந்தனர். 

கீழே உள்ள படங்களைப் பாருங்கள்:

ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான பேர் இதற்கு எதிர் வினையும் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.

பலரும் “நல்ல வேளை அந்நேரம் யாரும் படுக்கையில் இல்லை”என்று கூறியிருந்தனர். ஒருவர் “இது எனக்கு துர்கனவுபோல் உள்ளது” என்று கூறியிருந்தார். 

மலைப்பாம்பு கைப்பற்றப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது

Click for more trending news


.