லெபனான் தலைநகரில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு! பதறவைக்கும் வீடியோ!!

இதனை நேரில் கண்டவர்கள் பெரும் சப்தத்துடன் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், ஒரு மைல் தொலைவில் இருந்த கட்டிடங்கள் கூட நடுங்கின என்றும் கூறுகின்றனர்.

லெபனான் தலைநகரில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு! பதறவைக்கும் வீடியோ!!
Beirut:

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்கின்றது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்கள் நொறுங்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்களில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ உதவிக்காக தவிப்பதை காட்சிப்படுத்தியுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் விளைவாக இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் லெபனான் ஊடகங்களின் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை நேரில் கண்டவர்கள் பெரும் சப்தத்துடன் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், ஒரு மைல் தொலைவில் இருந்த கட்டிடங்கள் கூட நடுங்கின என்றும் கூறுகின்றனர்.