ராகுலின் சவாலை ஏற்கிறாரா மோடி? விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

விவசாயிகளுக்கு கடன்களை ரத்து செய்யும் திட்டம் கொண்டுவராத வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பாக அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சவாலை ஏற்கும் விதமாக விவசாயிகளுக்கான மிகப் பெரும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழந்தது. இதன்பின்னர் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்து காங்கிரஸ் அரசுகள் அறிவிப்பை வெளியிட்டன.

juhgfhfg

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் திட்டத்தை கொண்டு வராத வரையில், பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று கூறினார்.

அவரது சவாலை ஏற்கும் வகையில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி, விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோருடன் மோடி தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

இது ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்கு முன்பாக விவசாய கடன் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • நிதி மற்றும் விவசாய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார் மோடி
  • ஜனவரி 5-ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது
  • விவசாயிகள் பிரச்னையில் மோடிக்கு அக்கறையில்லை என்று ராகுல் கூறியிருந்தார்
More News