This Article is From Jun 16, 2020

“பாலிவுட்டின் வழமைகளை அடித்து நொறுக்கிய” சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறுபக்கம்!

பிரியங்கா சோப்ரா, ‘சூரிய உதயத்தின் போது நாம் ஆஸ்ட்ரோ இயற்பியல் குறித்து பேசிக் கொண்டு இருந்ததை என்னால் மறக்கவே முடியாது,’ என்று தன் அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார். 

“பாலிவுட்டின் வழமைகளை அடித்து நொறுக்கிய” சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறுபக்கம்!

நோபல் பரிசு வென்ற LIGO புவிஈர்ப்பு அலை ஆய்வுக் குழுவில் பங்கு வகித்தவர் முனைவர் கரண் ஜானி. 

ஹைலைட்ஸ்

  • கடந்த ஞாயிற்றுக் கிழமை சுஷாந்த் காலமானார்
  • அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது
  • அவரின் இறப்பு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ரோ இயற்பியலாளர் மற்றும் விஞ்ஞானியான முனைவர் கரண் ஜானி, மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறு பக்கத்தைப் பற்றி ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். 

ஜானி, சுஷாந்த் பற்றி உருக்கமான அஞ்சலியை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘சுஷாந்த்தின் மறுபக்கத்தைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றவன் நான். அனைத்து விஷயங்கள் பற்றியும் ஆர்வமுடன் இருப்பவர். தேடுபவர். அதீத வாசிப்புப் பழக்கம் உடையவர் சுஷாந்த். அவரின் புத்தக அலமாரியில் உள்ள புனைவல்லாத புத்தகங்களின் கனத்தைப் பார்த்தாலே போதும், பாலிவுட் நட்சத்திரங்களின் வழமைகள் தவிடு பொடியாகும். அவர்களின் வாசிப்புப் பழக்கம் குறித்து இருக்கும் எண்ணம் மாறிவிடும்.

அவர் வெறுமனே பல லட்சம் ரசிகர்கள் கொண்ட பாலிவுட் நட்சத்திரம் மட்டுமல்ல. இந்த அண்டத்தின் பொருள் என்ன என்று தேடிய நபர்' என்று பல அரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 

நோபல் பரிசு வென்ற LIGO புவிஈர்ப்பு அலை ஆய்வுக் குழுவில் பங்கு வகித்தவர் முனைவர் கரண் ஜானி. 

அவர் மேலும், “மிகவும் லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதி பொருந்திய தொலைநோக்கியை தன் பால்கனியில் வைத்திருந்தார் சுஷாந்த். அமெரிக்காவில் உள்ள LIGO ஆய்வகத்தைப் பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் அவருக்கு இருந்தது. அவரிடம் நான் ஸ்டிரிங் தியரி முதல் இலக்கியம் வரை பலவற்று குறித்துப் பேசியுள்ளேன். விரைவில் எதிர்கால ஸ்பேஸ்டைம் கோனில் சந்திப்போம் என்று சுஷாந்திடம் கடைசியாக கூறியிருந்தேன். கண்டிப்பாக சந்திப்போம்” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

ஜானியின் மொத்தப் பதிவையும் பார்க்க:
 

சுஷாந்தின் அறிவியல் ஆர்வம் குறித்து பிரியங்கா சோப்ரா, ‘சூரிய உதயத்தின் போது நாம் ஆஸ்ட்ரோ இயற்பியல் குறித்து பேசிக் கொண்டு இருந்ததை என்னால் மறக்கவே முடியாது,' என்று தன் அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல சுஷாந்துடன் ‘கை போ சே' மற்றும் ‘கேதர்நாத்' திரைப்படங்களில் இயக்குநராக பணி செய்த அபிஷேக் கபூர், ‘அறிவியலில் மிக ஆர்வம் கொண்டவர் சுஷாந்த். இந்த அண்டத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்தவர்,' என்று கூறியுள்ளார். 

சுஷாந்தின் மறைவைத் தொடர்ந்து அவரின் குடும்பம், ‘சுஷாந்த் தற்போது எங்களுடன் இல்லை என்பதை நினைத்தால் வலிக்கிறது. அவரது ரசிகர்கள் சுஷாந்தின் வாழ்க்கையைக் கொண்டாடுமாறுக் கேட்டுக் கொள்கிறோம். உங்களின் பிரார்த்தனையில் அவர் இருக்கட்டும். இந்த துக்கமான சமயத்தில் எங்களின் பிரைவசியை மதித்து நடக்குமாறு ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்,' என்று அறிக்கை மூலம் கூறியது. 

Click for more trending news


.