இணையத்தில் வலம் வரும் பிரபல பாலிவுட் நடிகையின் திருமணப் பத்திரிகை

இந்த பத்திரிக்கையில் முதலில் ஆலியா பட்டின் பெயர் தவறாக போடப்பட்டுள்ளது. அதில் ‘Alia’ என்பதற்கு பதிலாக ‘Aliya’ என்று உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இணையத்தில் வலம் வரும் பிரபல பாலிவுட் நடிகையின் திருமணப் பத்திரிகை

தந்தை பெயர் முகேஷ் பட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஆலியாவின் மாமா.


பாலிவுட்டின் காதல் பறவைகள் என்று அழைக்கப்படும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரின்  போலி திருமண பத்திரிகையை சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கியது. இந்த பத்திரிகை ரசிகரால உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை பார்த்ததும் கண்டுபிடித்துவிடலாம். எழுத்து பிழைகள் மற்றும் தவறான தகவல்களால் நிறைந்துள்ளது. 

கீழே ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரி போலி திருமண பத்திரிகையை காணலாம்:

பத்திரிகையில், திருமதி நீது மற்றும் திரு. ரிஷி கபூர் ஆகியோரின் மகன் ரன்பீர், திருமதி சோனி மற்றும் முகேஷ் பட் மகளான ஆலியாவுடன் 2020 ஜனவரி 22 புதன்கிழமை மாலை 5 மணி முதல் திருமண நிகழ்வுகள் தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இடம் : உமைத் பவன் அரண்மனை, ஜோத்பூர்

இந்த பத்திரிக்கையில் முதலில் ஆலியா பட்டின் பெயர் தவறாக போடப்பட்டுள்ளது. அதில் ‘Alia' என்பதற்கு பதிலாக ‘Aliya' என்று உள்ளது. இரண்டாவதாக தந்தை பெயர் முகேஷ் பட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஆலியாவின் மாமா. தந்தையின் பெயர் மகேஷ் பட். திருமணத் தேதி '22nd' என்பதற்கு பதிலாக ‘22th' என்று உள்ளது. 

இதனை ட்விட்டர் பயனர்கள் இந்த பிழைகளை சுட்டிக்காட்டி பல மில்லியன் டாலர் செலவில் நடக்கும் திருமணப் பத்திரிகையில் இத்தனை எழுத்துப் பிழைகள் இருக்குமா…? இது ஒரு போலி என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளனர். 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................