சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல் நடந்தது எப்படி…? விவரிக்கும் செய்தி தொகுப்பு

எம்.எல்.ஏவின் இந்த பயணத்திற்கு உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு இல்லை அதனால் இந்தவழியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும் எம்.எல்.ஏ மக்களை சந்திக்க விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் எஸ்யூவி வாகனம் இரண்டாக பிளந்தது.

ஹைலைட்ஸ்

  • எஸ்யூவி வாகனத்தில் இருந்த 5 பேர் மரணமடைந்தனர்
  • 4 அடி ஆழத்தில் கன்னிவெடி பதிக்கப்பட்டிருந்தது.
  • இந்த தாக்குதலுக்கு 20 கிலோ வெடிமருத்து பயன்படுத்தப்பட்டது- பத்திரிகையாளர்
Dantewada:

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மந்தாவி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். தண்டேவாடா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த எம்.எல்.ஏ.வின் வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். 

தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தண்டேவாடாவில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த கொடூர சம்பவத்தை மாவோயிஸ்டுகள் நிகழ்த்தியுள்ளனர். 

இந்த தாக்குதலில் மாண்டவி அவரது மூன்று தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் எஸ்யூவி வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். 

நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பிரசாரத்திற்கு புல்லட் ப்ரூஃப் வாகனத்தை எம்எல்ஏ உபயோகம் செய்துள்ளார். அதையும் மீறி, இந்த தாக்குதல் சேதத்தை அளித்திருக்கிறது. இந்த தாக்குதலில் எஸ்யூவி வாகனம் இரண்டாக பிளந்து காணப்பட்டது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தாக்குதலில் எஞ்சிய வாகனங்களை பார்க்கலாம். 

ur4bg6kg

குண்டுவெடிப்பு நிகழ்ந்த 4 அடி பள்ளம்

“பாஜக எம்.எல்.ஏ பீமா மந்தவி அவரது ஓட்டுநர் மூன்று பாதுகாவலர்கள் இந்த தாக்குதலில் உயிரிழுந்துள்ளனர். குகாண்டா பகுதியில் போதிய பாதுகாப்புகள் இன்றி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய போதும் எம்.எல்.ஏ இந்த பாதையில் சென்றிருக்கக் கூடாது” என்று சிறப்பு துணை ஆணையர் (மாவோயிஸ்ட் ஒழிப்பு) டிஎம் அவாஸ்தி கூறியுள்ளார்.  

குண்டு வெடிப்பு சாலையின் நடுவில் ஒரு நான்கு அடி ஆழ்ந்த பள்ளம் பதிக்கப்பட்டுள்ள கன்னிவெடியினால் நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்புக்குப் பிறகு, மாவோய்ஸ்ட் சுமார் அரை மணிநேரம் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். மற்ற பாதுகாவலர்கள் பின்வாங்க வேண்டும் என்பதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.  

உள்ளூர் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர். எம்.எல்.ஏவின் இந்த பயணத்திற்கு உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு இல்லை அதனால் இந்தவழியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும் எம்.எல்.ஏ மக்களை சந்திக்க விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கரில் ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23 ஆகிய நாட்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது.