This Article is From Jun 18, 2018

தண்ணீர் பாட்டிலால் ஏற்பட்ட கார் விபத்து

ஆதிர்ஷ்டவாசமாக தலைகீழாக விழுந்த காரிலிருந்து உயிர் தப்பினார் ஓட்டுநர்

தண்ணீர் பாட்டிலால் ஏற்பட்ட கார் விபத்து

ஹைலைட்ஸ்

  • காரை ஓட்டிய பெண்மணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
  • பிரேக்கை மிதிக்க முடியாமல் போனதை விபத்திற்கு காரணமாக கூறினார்
  • இதைத் தொடர்ந்து மற்ற ஓட்டுநர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது

இங்கிலாந்தின் சசெக்ஸ்(sussex) நகரில், பெட்ரோல் நிலையத்தில் தலைகிழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரை ஓட்டிய பெண்மணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சசெக்ஸ்(sussex)காவலர்கள் ஜூன் 6 மாலை நடந்த பயங்கரமான விபத்திற்க்கு தண்ணீர் பாட்டிலே காரணம் என்று கூறுகின்றனர்.

போலிசாரின் கருத்துப்படி, பிரேக் தோல்வியடைந்ததை உணர்ந்த போது, டிராஃபிக்கை நெருங்கி கொண்டிருந்ததாக டிரைவர் தெரிவித்தார். ரோட்டில் சென்றுக் கொண்டிருந்த பிற கார்களை இடிக்காமல் தடுப்பதற்காக அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்தின் நுழைந்து நிறுத்த முயற்சி செய்தபோது கார் தலைகீழாக கவிழ்ந்தது.
 
sussex car crash

அந்த பெண், பிரேக்கை மிதிக்க முடியாமல் போனதை விபத்திற்கு காரணமாக கூறினார்.எனினும், போலிஸார் அந்த பெண் ஓட்டிய சிகப்பு ஃபோர்டு KAவை சோதனை செய்த போது பிரேக்கில் எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக அவர்கள் கண்டுப்பிடித்தது நசுங்கிய தண்ணீர் பாட்டில்.

கார் பரிசோதனையை தொடர்ந்து, நாங்கள் நசுங்கிய நிலையிலிருந்த ஒரு முழு பாட்டில் தண்ணீரை கண்டுபிடித்தோம். நாம் குறிப்பிட்ட சிலவற்றை சொல்ல முடியாது எனினும், தண்ணீர் பாட்டிலே பிரேக்கின் கீழ் சென்று ஓட்டுநரை பிரேக் போடவிடாமல் செய்திருக்கிறது என்று Polegate சாலை போலிஸ் பிரிவின் காவல் ஆணையர் கேரி டக்ளஸ்(Gary Douglas) கூறினார்.

இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார், அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி தப்பிதார். ஓட்டுநரின் விரைவான சிந்தனையே காயங்களின்றி தப்பியதற்கு காரணம் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கும் என்று கேரி கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மற்ற ஓட்டுநர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் பயணங்களை தொடங்குவதற்கு முன்னர் வண்டியின் உள்ளேயிருக்கும் பொருட்கள் அனைத்தும் சரியாகயிருக்கிறதா என்று சரிப்பார்பதன் மூலம் பெடல்ஸ் மற்றும் பிற கட்டுபாடுகளைப் பயண்படுத்த எந்த ஒரு ஆபத்தும் வராது.
 Click for more trending news


.