சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் கைது!

சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் கைது!

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 உயிரிழந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் அதிக எடையுடன் கருங்கற்களால் 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவருக்கு அருகே 4 ஓட்டு வீடுகள் இருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக  தொடர்ந்து, கனமழை பெய்து வருகிறது.  

இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மழையால் சேதமடைந்திருந்த காம்பவுண்ட் சுவர் அப்படியே சரிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், வீடுகளுக்குள் தூங்கிய நிலையில் பலியான 17 பேர் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் தலைமறைவானார்.

இதனிடையே, சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். 

இந்நிலையில், சிறுமுகை பகுதியில் பதுங்கியிருந்த சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நிறைவுபெற்றவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More News