விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் பொதுக்கூட்டம், மெட்ரோ பயணம் என பிஸியான மோடி!!

அதிகாலை 3.30-க்கு நடந்த விமானப்படை தாக்குதலை பிரதமர் மோடி நேரடியாக கண்காணித்துள்ளார். அதன்பின்னர் தனது நிகழ்ச்சிகளில் பிஸியாகி விட்டார்

 Share
EMAIL
PRINT
COMMENTS

டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் செய்த காட்சி.


New Delhi: 

தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலை நேரடியாக கண்காணித்த பிரதமர் மோடி அதன்பின்னர் தனது நிகழ்ச்சிகளில் பிஸியானார். ஒரு பெரிய சம்பவத்தை நடத்தி விட்ட பின்னர், மிகவும் கூலாக மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டெல்லியில் இஸ்க்கான் கோயிலுக்கு சென்ற மோடி அங்கு உலகின் மிகப்பெரும் பகவத் கீதையை புரட்டிப் பார்த்தார். மொத்தம் 2.8 மீட்டர் நீளம் கொண்ட பகவத் கீதையின் எடை 800 கிலோ.
பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினாலும், அதிகாலையில் நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் குறித்து ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை.

ஆனால் மறைமுகமாக இந்த தாக்குதல் குறித்து பேசிய மோடி, ‘மனிதத்தின் எதிரிகளிடம் இருந்து இந்த உலகம் காப்பாற்றப்பட வேண்டும். கடவுளின் சக்தி எப்போதும் நம் பக்கம் இருக்கிறது. இந்த செய்தி துஷ்டர்களுக்கும், அசுரர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்' என்று கூறினார்.

முன்னதாக ராஜஸ்தானில் பேசிய மோடி, ‘நாடு பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது. நாட்டை விட பெரியது ஏதும் இல்லை' என்று பேசினார்.

 

மேலும் படிக்க : மிராஜ் 2000 போர் விமானம் குறித்த சிறப்பு தகவல்கள்..!சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................