This Article is From Jan 21, 2019

போலீஸாரிடம் இருந்து தப்பி, குதிரையிடம் மாட்டிய குற்றவாளி..! #ViralVideo

போலீஸாரிடம் இருந்து தப்பித்த குற்றவாளி ஒருவர், குதிரைகளிடம் மாட்டி கொண்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது

போலீஸாரிடம் இருந்து தப்பி, குதிரையிடம் மாட்டிய குற்றவாளி..! #ViralVideo

குற்றவாளியை துரத்திய குதிரைகள்

போலீஸாரிடம் இருந்து தப்பித்த குற்றவாளி ஒருவர், குதிரைகளிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை, ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த போலீஸ் ஹெலிகாப்டரில் பறந்து சென்றபடி படம் பிடித்துள்ளது.

29 வயதான டொமினிக் மவுல்ட்ஸ்பை, கள்ள லைசன்ஸ் ப்ளேட் உடன் காரை ஓட்டியுள்ளார். போலீஸ் அவரை  பிடிப்பதற்குள், தப்பித்து ஒரு குதிரைப் பண்ணைக்குள் சென்று விட்டார்.

அவர் துரதிர்ஷ்டம், அங்கிருந்த மூன்று குதிரைகள் அவரைத் துரத்த ஆரம்பிட்டது. ஒரு குதிரை அவரை உதைக்க, வேலிகளைத் தாண்டி வெளியே விழுந்தார். அதன் பின்னர் போலீஸ் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அந்த வீடியோ:

 
 

இதனைப் படம் பிடித்தது அந்த மாகாணத்தின் போலீஸ் ஹெலிகாப்டர். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதற்கு பல கமென்ட்களும் லைக்ஸும் குவிந்த வண்ணம் உள்ளன.

 

டொமினிக் மவுல்ட்ஸ் மீது, தப்பித்து ஓடியது, கள்ள லைசன்ஸ் ப்ளேட் உடன் கார் ஓட்டியது ஆகிய குற்றங்களுக்காக  சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டும், போலீஸாரிடம் இருந்து தப்பித்த குற்றவாளி ஒருவரை மாடுகள் துரத்திய வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.