This Article is From Jun 26, 2019

’இன்னும் உயரத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன்’ மக்களவையில் ராகுலை கலாய்த்த மோடி!

காங்கிரஸ் அரசு மீதான வெறுப்பு காரணமாகவே, 2014ல் மக்கள் பாஜகவை தேர்வு செய்தனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி நேற்று மக்களவையில் உரையாற்றினார்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் பிரதமர் மோடி.
  • நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி மட்டுமே காங்கிரஸ் புகழ்கிறது.
  • காங்கிரஸ் மீதான வெறுப்பு காரணமாகவே, 2014ல் பாஜகவை தேர்வு செய்தனர்.
New Delhi:

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில், பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

1975ல் அவசரநிலை முதல் கட்சிக்குத் தலைமை தாங்கும் காந்தி குடும்பத்தினர் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் 'மிக உயர்ந்துள்ளனர்' அதனால், அவர்களால், தரையை பார்க்க முடியாது.

79h3erpk

அவர்கள் இன்னும் உயர செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம் என்று மோடி கூற அவையில் உள்ள எம்.பிக்கள் பலத்த சத்தத்துடன் சிரித்தனர்.

மிக அதிகமாக உயர சென்றதால், தரையில் இருந்து வேரறுக்கப்பட்டுள்ளீர்கள். எங்களது நோக்கம், அடிமட்டத்தில் இருந்து மக்களுடன் இணைந்து அவர்களை பலப்படுத்த வேண்டும் என்பது தான்.

2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தவர்கள், வாஜ்பாயின் நல்ல பணிகளைப் பற்றி பேசினீர்களா? நரசிம்மராவின் நல்ல பணிகளைப் பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா? இந்த மக்களவை விவாதத்தில் அவர்கள் மன்மோகன் சிங் பற்றி கூட பேசவில்லை.

இன்று ஜூன் 25. அவசரநிலையை பிறப்பித்தவர்கள் யார்? அந்த இருண்ட நாட்களை நாம் மறக்க முடியாது. அவசரநிலைக்கு மக்களை தள்ளிய, பொறுப்பாளர்களை மறக்க முடியாது. அதுபோன்ற நிலை மீண்டும் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்பதே எங்கள் கருத்து என்று அவர் கூறினார்.

.