பெங்களூரில் முத்திரை அடையாளம் உள்ளவர்கள் வெளியில் தென்பட்டால் கைது!

முத்திரை உள்ளவர்கள் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் முத்திரை அடையாளம் உள்ளவர்கள் வெளியில் தென்பட்டால் கைது!

முத்திரை வைக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தகவல்.

Bengaluru:

வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து, பொது இடங்களில் முத்திரை வைக்கப்பட்டவர்கள் தென்பட்டால், கைது செய்யப்படுவார்கள் எனப் பெங்களூர் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, முத்திரை வைக்கப்பட்டவர்கள் 5000 பேர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொது நலனுக்காக வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்வதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற முத்திரை வைக்கப்பட்டவர்கள் பெங்களூர் மாநகர பேருந்தில் பயணம் செய்ததாகவும், சிலர் உணவகங்களில் அமர்ந்திருந்ததாகவும் எனக்குச் சிலர் போனில் தகவல் தெரிவித்தனர். இனி 100க்கு தகவல் தெரியுங்கள் அவர்கள் கைது செய்யப்பட்டு, அரசு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முத்திரை உள்ளவர்கள் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கர்நாடகாவில் நேற்றைய தினம் மட்டும், 6 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. 

கர்நாடகாவில் 9 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து வணிக நடவடிக்கைகளையும் மார்ச்.31ம் தேதி வரை நிறுத்த அறிவித்துள்ளது. 

அவை, பெங்களூர், சிக்கபல்லபுரா, மைசூர், மங்களூர், கோடகு, கலாபுராகி, பெல்லாகவி, தார்வாத் உள்ளிட்ட மாவட்டங்களாகும் என உள்துறை அமைச்சர் பாசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.