This Article is From Nov 12, 2019

Ayodhya உத்தரவு: ரெடியாகும் உள்துறை, நிதி அமைச்சகங்கள்- அரசின் மூவ் என்ன..?

அயோத்தி வழக்கில் (Ayodhya Case) கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

Ayodhya உத்தரவு: ரெடியாகும் உள்துறை, நிதி அமைச்சகங்கள்- அரசின் மூவ் என்ன..?

Ayodhya land dispute case - சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

New Delhi:

அயோத்தி வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய மொத்த இடமும் ராம் லல்லா தரப்புக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் அங்கு ராமர் கோயில் கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது ராமர் கோயிலைக் கட்டுவதற்கு டிரஸ்ட் ஆரம்பிக்கும் பணியில் அரசு தரப்பு இறங்கியுள்ளதாம். இதற்காக உள்துறை, நிதி அமைச்சகங்களில் உள்ள பல்வேறு உயர் அதிகாரிகள் இந்த டிரஸ்ட் அமைக்கும் பணிகளில் அமர்த்தப்பட்டு உள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுவதுமாக படித்து, அதை நன்கு ஆராய்ந்து அதனடிப்படையில் சட்டத்துக்கு உட்பட்ட டிரஸ்ட் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறதாம். இது தொடர்பாக சட்ட அமைச்சகம் மற்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடமும் கருத்து பெறப்பட உள்ளதாம்.

“சட்ட அமைச்சகம், அட்டர்னி ஜெனரலின் கருத்துகள் பெறப்பட்டு, அதனடிப்படையில்தான் ராமர் கோயில் கட்டுவதற்கான டிரஸ்ட் அமைக்கப்படும். தற்போதே கலந்தோலிசிப்பது நடந்து வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை,” என்று சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரி நம்மிடம் தெரிவித்தார். 

அயோத்தி வழக்கில் (Ayodhya Case) கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (Ranjan Gogoi) தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கியது.

இதன்படி சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு தொடர்ந்த சன்னி வக்ப் வாரியத்திற்கு, அயோத்தியிலேயே மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தவிட்டுள்ளது. மேலும், கோயில் கட்டுவது தொடர்பான திட்டத்தை 3 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

.