ஹாலிவுட் நடிகர் பர்ட் ரேனல்ட்ஸ் காலமானார்!

ரேனல்ட்ஸ், 1997 ஆம் ஆண்டு நடித்த ‘பூகி நைட்ஸ்’ என்ற திரைப்படத்துக்காக கோல்டன் க்ளோப்ஸ் மற்றும் பல விருதுகளை வாங்கினார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஹாலிவுட் நடிகர் பர்ட் ரேனல்ட்ஸ் காலமானார்!
Los Angeles: 

மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகரான பர்ட் ரேனல்ட்ஸ், நெஞ்சு வலி காரணமாக 82 வயதில் காலமானார். 

அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாணத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ரேனல்ட்ஸ் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நெஞ்சு வலி காரணமாக காலமாகியுள்ளார். 

ரேனல்ட்ஸ், 1997 ஆம் ஆண்டு நடித்த ‘பூகி நைட்ஸ்’ என்ற திரைப்படத்துக்காக கோல்டன் க்ளோப்ஸ் மற்றும் பல விருதுகளை வாங்கினார். ஆஸ்கர் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார். 

1970-களில் ரேனல்ட்ஸ் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். ‘ஸ்மோக்கி அண்டு தி பண்டிட்’, ‘ஸ்டார்ட்டங் ஓவர்’, ‘தி பெஸ்ட் லிட்டில் வேர்ஹவுஸ் இன் டெக்சாஸ்’ போன்றவைகள் பட்டியலில் உள்ள சில ஹிட் படங்கள் ஆகும்.

2015 ஆம் ஆண்டு ரேனல்ட்ஸ், ‘புதிய இயக்குநர்களுடன் நான் வேலை செய்ய விரும்பவில்லை. ஒரு நடிகனாக புதுப் புது விஷயங்களை செய்ய நான் ஆர்வம் காட்டவில்லை. மகிழ்ச்சியாக இருக்க விரும்பினேன். இந்த முடிவினால், நான் ஒரு நல்ல நடிகன் என்று காட்ட தவறிவிட்டேன்’ என்று எழுதியுள்ளார்.

‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் ‘ஜேம்ஸ் பாண்டு’ கதாபாத்திரத்திலும் நடிக்க வந்த வாய்ப்பை தட்டிக் கழித்தவர் ரேனல்ட்ஸ்.

அவர் மறைவை அடுத்து ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................