This Article is From Dec 30, 2019

CAA விவகாரம்: Sadhguru-வின் வீடியோவை ரெஃப்ரன்ஸாக ட்வீட் செய்த PM Modi!

India Supports CAA - பிரதமர் நரேந்திர மோடியின் NaMo செயலி மூலம், வீடியோக்கள், படங்களைப் பகிர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

CAA விவகாரம்: Sadhguru-வின் வீடியோவை ரெஃப்ரன்ஸாக ட்வீட் செய்த PM Modi!

இந்திய அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கொந்தளிப்பு நிலவும் நிலையில், மத்திய அரசு தரப்பு ‘India Supports CAA’ என்னும் வாசகம் மூலம் எதிர் பிரசாரம் செய்யத் துவங்கியுள்ளது.

New Delhi:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) பேசியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் ஜக்கியின் வீடியோவைப் பகிர்ந்துள்ள மோடி, “சிஏஏ பற்றி சத்குரு ஜக்கி வாசுதேவ் விளக்கம் கொடுப்பதைப் பாருங்கள். சிஏஏ-வுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றுக் காரணங்கள் மற்றும் நம் கலாசாரத்தின் சகோதரத்துவம் பற்றி அவர் பட்டியலிடுகிறார். உள்நோக்கம் கொண்டு இச்சட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதைப் பற்றியும் அவர் தெரிவிக்கிறார்,” என்று கூறி #IndiaSupportsCAA என்ற ஹாஷ்-டேக் உடன் பகிர்ந்துள்ளார். இன்று காலை முதல் இந்த ஹாஷ்-டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

இது, பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிஏஏ குறித்து மேலும் கூறும் மோடி, “குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மத ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்படும். யாருடைய குடியுரிமையும் எடுக்கப்படாது,” என்றுள்ளார். 

இந்திய அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கொந்தளிப்பு நிலவும் நிலையில், மத்திய அரசு தரப்பு ‘India Supports CAA' என்னும் வாசகம் மூலம் எதிர் பிரசாரம் செய்யத் துவங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் NaMo செயலி மூலம், வீடியோக்கள், படங்களைப் பகிர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

.