மணமுடிக்க அனுமதிக்காத குடும்பம்… தற்கொலை செய்து கொண்ட இந்து- முஸ்லீம் காதல் ஜோடி

மும்பையைச் சேர்ந்த இந்து- முஸ்லீம் காதல் ஜோடி, அவர்களின் திருமணத்துக்கு குடும்பம் சம்பதிக்காததை அடுத்து தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சப்படுகிறது

மணமுடிக்க அனுமதிக்காத குடும்பம்… தற்கொலை செய்து கொண்ட இந்து- முஸ்லீம் காதல் ஜோடி

இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

ஹைலைட்ஸ்

  • சல்மான் அஃப்ரோஸ் கான் 26 வயது நிரம்பிய முஸ்லீம்
  • மணிஷா நெகில் 21 வயது நிரம்பிய இந்து பெண்
  • இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்
Mumbai: மும்பையைச் சேர்ந்த இந்து- முஸ்லீம் காதல் ஜோடி, அவர்களின் திருமணத்துக்கு குடும்பம் சம்பதிக்காததை அடுத்து தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சப்படுகிறது. 

மும்பையின் முலுந்த் பகுதியைச் சேர்ந்தவர் சல்மான் அஃப்ரோஸ் கான். இவருக்கு வயது 26. இவருக்கும் மணிஷா நெகில் என்ற 21 வயது நிறைந்த இந்து பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. ஏறக்குறைய கடந்த 4 ஆண்டுகளாக இவர்களுக்கு இடையில் காதல் உறவு இருந்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க தயார் ஆகினர். ஆனால், வெவ்வேறு மதங்கள் என்பதால், இவர்களின் குடும்பங்கள் கல்யாணத்துக்கு சரிவர ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து உள்ளனர்.

இதற்காக விஷம் வாங்கியுள்ளது அந்த இளம் காதல் ஜோடி. சல்மானின் காரில் இருவரும் விஷத்தைக் குடித்து உயிரை விட்டுள்ளனர். வெகு நேரமாக சல்மானின் கார் ஆன் செய்யப்பட்டு ஒரே இடத்தில் நின்றிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கார் கதவை உடைத்து சல்மான் மற்றும் நெகில் ஆகிய இருவரையும் மருத்துமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். மயக்க நிலையில் இருந்த இருவரையும் சோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
(With Inputs From PTI)