This Article is From Aug 19, 2019

கரடி கடிச்சிப் பார்த்திருப்பீங்க, கத்தி பார்த்திருப்பீங்க… டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா..?

செய்யானின் வீடியோவை பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

கரடி கடிச்சிப் பார்த்திருப்பீங்க, கத்தி பார்த்திருப்பீங்க… டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா..?

நியூஸ் 5 க்ளீவ்லேண்டு செய்தி நிறுவனம் அளித்த தகவல்படி, அந்த கரடியின் பெயர் செய்யான் என்று தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கரடி ஒன்று ஆடிய டான்ஸ், இணைய வைரலாகி வருகிறது. உண்மையில் அந்த கரடி, தன் பின் பக்கத்தில் ஏற்பட்ட அரிப்பை சுவற்றில் சொரிந்துள்ளது. ஆனால், அது பார்க்க டான்ஸ் போல தெரியவே, அனைவரும் அது குறித்தான வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்து வருகின்றனர். நியூஸ் 5 க்ளீவ்லேண்டு செய்தி நிறுவனம் அளித்த தகவல்படி, அந்த கரடியின் பெயர் செய்யான் என்று தெரியவந்துள்ளது. 

செய்யான், தனது பின் பக்கத்தை அரிப்புத் தாங்க முடியாமல் சொரியும் காட்சியைப் பகிர்ந்து, ‘ஜங்கிள் புக்'-ல் வரும் பல்லு போலவே இந்த கரடி நடந்து கொள்கிறது என்று கருத்திட்டு வருகின்றனர். 
 

via GIPHY

வீடியோவை கீழே பாருங்க:

செய்யானின் வீடியோவை பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதில் ஒருவர், “இந்த கரடி நடனத்துக்கு ஒரு நல்ல இசை பின்னணியில் போட வேண்டும்” என்று வீடியோவுக்குக் கீழ் கமென்ட் போட்டுள்ளார். இன்னொருவரோ, “செம க்யூட்டா இருக்கு” என்கிறார். 

க்ரிஸ்லி கரடிகள், மரங்கள் மற்றும் பல இடங்களில் தங்களின் பின் பக்கத்தைத் தேய்ப்பதற்குக் காரணம், ஒன்று, துணையைத் தேட. இன்னொன்று, தங்களின் எல்லைகளை மற்றவர்களுக்குச் சொல்ல என்று ஏபிசி செய்தி நிறுவனம் ‘டான்ஸுக்கான' பின்னணியைக் கூறுகின்றது. 

Click for more trending news


.