This Article is From Feb 25, 2019

"மனைவியுடன் பிரச்சனை... பிரதமரிடம் பேசணும்" விமானத்தை கடத்தியவரின் விநோத கோரிக்கை!

142 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பயணி துப்பாக்கி வைத்திருந்ததாகவும், சிட்டகாங்கிலிருந்து கிளம்பியது விமானி அறையை நோக்கி நகர்ந்த பயணி கதவை திறக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது.

டாக்காவிலிருந்து துபாய் கிளம்பிய விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • அவரது மனைவியுடன் பிரச்சனை என்று சக பயணிகள் கூறியுள்ளனர்
  • விமானத்துக்குள் பைலட்டின் அறைக்குள் நுழைய முயன்ற விமானி சுடப்பட்டார்
  • இவர் மிரட்டியவுடன் விமானி அவரசரமாக தரையிறங்க கோரியுள்ளார்

பங்களாதேஷ் கமேண்டோ படையினாரால் விமானத்துக்குள் பைலட்டின் அறைக்குள் நுழைய முயன்ற விமானி சுடப்பட்டார். "துப்பாக்கியால் சுடுவேன்" என அவர் மிரட்டயதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த பயணியிடம் விசாரித்த போது அவரது மனைவியுடன் பிரச்சனை என்றும் அதற்காக பங்களாதேஷ் பிரதமரிடம் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார். "ஆரம்பத்தில் அவரை சரண்டராக சொன்னோம். ஆனால் அவர் மறுத்ததால் சுட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானோம்" என்று மேஜர் ஜெனரல் மொடியுர் ரஹ்மான் தெரிவித்தார்.

டாக்காவிலிருந்து துபாய் கிளம்பிய விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர் மிரட்டியவுடன் விமானி அவரசரமாக தரையிறங்க கோரியுள்ளார்.

142 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பயணி துப்பாக்கி வைத்திருந்ததாகவும், சிட்டகாங்கிலிருந்து கிளம்பிய விமானி அறையை நோக்கி நகர்ந்த பயணி கதவை திறக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுத்த விமான குழுவினரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளுக்கு அவசர தரையிறக்கம் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டு அவர் சுடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எப்படி துப்பாக்கியுடன் விமானத்துக்குள் சென்றார் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. மேலும் அவர் யார் என்ற விசாரணையும் தொடர்ந்து வருகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.