This Article is From Aug 15, 2019

செல்வத்தை உருவாக்குபவர்களே இந்தியாவின் செல்வங்கள் - மோடி

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2-வது முறையாக மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் மோடி தொடர்ந்து 6-வது தடவையாக தனது சுதந்திர தின உரையை ஆற்றுகிறார்.

செல்வத்தை உருவாக்குபவர்களே இந்தியாவின் செல்வங்கள் - மோடி

முப்படை அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றார்.

New Delhi:

73-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டில் டெல்லி செங்கோட்டையில் பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது.

மத்தியில் பாஜக அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தொடர்ந்து 6-வது முறையாக தனது சுதந்திர தின உரையை பிரதமர் மோடி ஆற்றி வருகிறார். விழாவில் அவர் பேசியதாவது-

நாட்டு மக்கள் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். நாடு சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், பல இடங்களில் கனமழை, வெள்ளம் என பிரச்னைகளையும் சந்தித்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் 24 மணி நேரமும் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

qbvktgqg

நாங்கள் ஆட்சிக்கு வந்த 10 வாரத்தில் நாடு தடையில்லா வளர்ச்சியை கண்டிருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் முத்தலாக் நடைமுறை நீக்கம் ஆகியவை முஸ்லிம் சகோதரிகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். 

இது 21-ம் நூற்றாண்டு. இந்த சூழலில் மக்களின் கனவுகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 
மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது. எனவேதான் ‘ஜல் சக்தி' என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. 

மருத்துவத்துறையை இன்னும் மக்களுக்கு ஏற்றதாக, எளிதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

2014 – நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சி மாறினால் நாட்டில் மாற்றம் வந்துவிடுமா என்று பலர் எண்ணிக் கொண்டிருந்தினர். 2014-19-ல் நாங்கள் கடுமையாக உழைத்தோம். அப்போது எங்கள் கவனம் முழுவதும் நாட்டு முன்னேற்றம், குடிமக்களின் நலன் என்பதில்தான் இருந்தது. 
இன்றைக்கு நாங்கள் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். இது மக்கள் எங்கள் மீது கொண்ட நம்பிக்கையை காட்டுகிறது. எங்களால்தான் நாட்டை சிறப்பாக முன்னேற்ற முடியும் என்று மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.

மக்கள் பிரச்னைகளுக்கான தீர்வுகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தப் பாதையில் தடைகள் இருக்கலாம். அவற்றை தகர்த்து வருகிறோம். முத்தலாக் பிரச்னையால் முஸ்லிம் பெண்கள் எந்த அளவுக்கு அச்சப்பட்டு இருந்தனர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

66l433qg

 நாங்கள் பிரச்னைகளை உருவாக்கவோ, அல்லது இருப்பனவற்றை நீண்ட காலத்திற்கு இழுத்தடித்துக் கொண்டிருக்கவோ விரும்பவில்லை. எங்கள் அரசு பொறுப்புக்கு வந்த 70 நாட்களுக்குள் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மாநிலங்களவையில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி உள்ளோம். ஜம்மு காஷ்மீருக்கும், லடாக்கிற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

ஒரு தேசம், ஒரு அரசியலமைப்பு என்பது தற்போது சாத்தியமாகிவிட்டது. ஒரு நாடு ஒரு வரி என்ற வகையில் வாழ்நாள் கனவாக ஜிஎஸ்டி கொண்டு வந்தோம். இன்று ஒரு தேசம் ஒரு தேர்தல் பற்றி உரையாடத் தொடங்கியுள்ளது.

தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என திருக்குறளை குறிப்பிட்டு தமிழில் பேசினார் மோடி. அத்துடன் ‘ஜல் ஜூவன் திட்டம் இன்னும் வேகமாக செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவில் அரசாங்கம் நிலையானது கொள்கைகளை கணிக்கக் கூடியது.இந்தியாவுடனான வர்த்தகத்தை ஆராய உலகம் ஆர்வமாக உள்ளது. விலைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் நாங்கள் பணீயாற்றி வருகிறோம். நமது பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவானவை.

செல்வத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறந்த தேசிய சேவை செல்வத்தை உருவாக்குபவர்களை சந்தேகத்துடன் பார்க்க வேண்டாம். செல்வம் உருவாக்கக்கப்படும் போது செல்வம் விநியோகிக்கப்படும். செல்வத்தை உருவாக்குவது முற்றிலும் அவசியம். செல்வத்தை உருவாக்குபவர்களே இந்தியாவின் செல்வம் நாங்கள் அவர்களை மதிக்கிறோம்.

.