This Article is From Mar 03, 2019

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடு நீடிக்கும்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

விமான நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

ஹைலைட்ஸ்

  • புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது
  • வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகின்றன
  • மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடு நீடிக்கும்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன், தூத்துக்குடியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் அடங்குவர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதில் 300-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் 60 மணிநேரமாக பிணையில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரங்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எச்சரிக்கையின்பேரில் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்கள் அனுமதி சீட்டு விநியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தன. அடுத்த உத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.