This Article is From Apr 09, 2020

சென்னையில் கொரோனா நிலவரம் என்ன? - ஏப்ரல் 9 ஆம் தேதி மண்டலம் வாரியாக விவரம்

Coronavirus in Chennai: மொத்தமாக சென்னையில் 156 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

சென்னையில் கொரோனா நிலவரம் என்ன? - ஏப்ரல் 9 ஆம் தேதி மண்டலம் வாரியாக விவரம்

Coronavirus in Chennai: சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 43 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 738 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • நேற்று மட்டும் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது
  • ஏப்ரல் 14 வரை இந்தியளவில் ஊரடங்கு அமலில் உள்ளது

Coronavirus in Chennai: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 679 பேர் ஒரே குழுவில் இருந்தவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சென்னையில் கொரோனா நிலவரம் பற்றி, பெருநகர் சென்னை மாநகராட்சி அளித்த தகவலின்படி, “சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில் திருவொற்றியூர் மண்டலத்தில் 4 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 13 பேருக்கும், ராயபுரத்தில் 43 பேருக்கும்,

திரு.வி.க நகரில் 22 பேருக்கும், அண்ணா நகரில் 19 பேருக்கும், தேனாம்பேட்டையில் 11 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 18 பேருக்கும், வளசரவாக்கத்தில் 4 பேருக்கும், ஆலந்தூரில் 2 பேருக்கும், அடையாரில் 4 பேருக்கும், பெருங்குடியில் 5 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும்” கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் 156 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

.