சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மே 7 ஆம் தேதி காலை வரை என்ன நிலவரம்?

மே 7 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 2,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மே 7 ஆம் தேதி காலை வரை என்ன நிலவரம்?

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 348 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளார்கள்
  • சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் 22 பேர் உயிரிழப்பு
  • தமிகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 324 பேர். ஒட்டுமொத்த அளவில் 4,829 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,516 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 3,275 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (06.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 40

மணலி - 13

மாதவரம் - 30

தண்டையார்பேட்டை - 168

ராயபுரம் - 375

திரு.வி.க நகர் - 412

அம்பத்தூர் - 105

அண்ணா நகர் - 191

தேனாம்பேட்டை - 285

கோடம்பாக்கம் - 387

வளசரவாக்கம் - 176

ஆலந்தூர் - 14

 அடையாறு - 91

பெருங்குடி - 20

சோழிங்கநல்லூர் - 15

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 6

மே 7 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 2,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 348 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 1,952 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.