This Article is From Sep 04, 2019

கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்த நிலையில், மும்பையின் பல இடங்களில் கனமழை பெய்திருக்கிறது.

கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

மழை நீர் சூழ்ந்திருக்கும் காட்சி.

Mumbai:

மும்பையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகள் பலவற்றிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. 

மும்பையின் கிங் சர்க்கிள் ரயில் நிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்கியுள்ளது. 

முன்னதாக கனமழை மும்பையில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவிப்பு செய்திருந்தது. இந்த நிலையில் அங்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. 

மும்பை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவசர உதவி தேவைப்பட்டால் 100 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இன்று மும்பையில் அதிகபட்சம் 29 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை நிலவக்கூடும். 

.