பருவமழையால் பயங்கரம்! 4 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1,600 பேர் உயிரிழப்பு!!

அரசிடம் வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் முன்கூட்டியே பாதிப்பை அறியும் முறை இல்லாதது ஆகியவை பாதிப்புகளுக்கு முக்கிய காரணங்கள் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காடுகளை அழித்தல், நீர் நிலைகள் குறைந்து வருவது, பருவ நிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் வெள்ளபாதிப்பு பகுதிகள் அதிகரித்துள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பருவமழையால் பயங்கரம்! 4 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1,600 பேர் உயிரிழப்பு!!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை சந்தித்துள்ளது இந்தியா.


New Delhi/Lucknow: 

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த பாதிப்பை இந்தாண்டு பருவமழை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களில் பெய்த கனமழையில் மட்டும் மொத்தம் 1,600 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் பருவமழை ஜூனில் தொடங்கி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நீடிக்கும். இந்தாண்டு பருவமழை சராசரியை விட 10 சதவீதம் கூடுதலாக பெய்திருக்கிறது. அக்டோபரிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. rv463seo

பருவமழையால் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 144 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பீகார் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு அன்றாட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மத்திய அரசு வெளியிட்டுள்ள வெள்ள பாதிப்பு தகவலின்படி செப்டம்பர் 29-ம்தேதி வரையில் மொத்தம் 1,673 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒன்றாகும். 

அரசிடம் வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் முன்கூட்டியே பாதிப்பை அறியும் முறை இல்லாதது ஆகியவை பாதிப்புகளுக்கு முக்கிய காரணங்கள் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காடுகளை அழித்தல், நீர் நிலைகள் குறைந்து வருவது, பருவ நிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் வெள்ளபாதிப்பு பகுதிகள் அதிகரித்துள்ளன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................