கேரளா கன மழை: 34,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம்

கடந்த ஒரு வாரமாக கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால், பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கேரளா கன மழை: 34,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம்

திருவணந்தபுரம்: (பிடிஐ) கடந்த ஒரு வாரமாக கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால், பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், 34,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்

மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள 265 நிவாரண முகாம்களில், 8,033 குடும்பங்களும், 34,693 மக்களும் இடம் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 9 ஆம் தேதி பருவமழை தீவிரமடைந்ததால், மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், 36 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. 1,214 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.

பல இடங்களில் இன்னும் தண்ணீர்ன் அளவு குறையவில்லை என்று கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Newsbeep

ஜூலை 19 ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


 (इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)