This Article is From Aug 28, 2018

டெல்லியில் கனமழை… கடுமையான போக்குவரத்து நெரிசல்!

கனமழை பெய்ததை அடுத்து, டெல்லி போலீஸ் ட்விட்டரில் பல அலெர்ட் விஷயங்கள் குறித்து தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர்

New Delhi:

டெல்லி மற்றும் குர்கானில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று காலை முதல் அங்கு பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் பல மணி நேரம் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் தத்தளித்த பின்னர் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பும் நிலை உருவானது. குர்கானில் இருக்கும் சில பள்ளிகள் மழை காரணமாக இன்று விடுமுறை அறிவித்துள்ளன. 

கனமழை பெய்ததை அடுத்து, டெல்லி போலீஸ் ட்விட்டரில் பல அலெர்ட் விஷயங்கள் குறித்து தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர். இன்று ட்விட்டரில் ட்ரெண்டான சில விஷயங்களில் டெல்லி மழையும் ஒன்று. 

டெல்லி- ஜெய்ப்பூர்- மும்பை நெடுஞ்சாலையிலும் வாகன நெரிசல் அதிகமாகவே இருந்தது. ‘எங்கள் குழு வாகன ஓட்டத்தை சீராக வைத்திருக்க முயன்று வருகிறோம்’ என்று குர்கான் போலீஸ் துணை கமிஷனர் ஹீரா சிங் கூறியுள்ளார்.

g3r00i5o

நேற்று முதல் டெல்லியில் 49.6 மி.மீ மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கு இது தான் அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் வியாழக்கிழமை வரை டெல்லியில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் டெல்லியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த மாதம் முழுவதும் டெல்லியில் குறைவான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 

 

.