டெல்லியில் ஆலங்கட்டி மழை!! போக்குவரத்து கடும் பாதிப்பு!

Delhi Hailstorm: ஆலங்கட்டி மழை காரணமாக வெப்பநிலை குறைந்துள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

நகரின் பல்வேறு இடங்களில் வாகனங்கள் ஊர்ந்துசெல்கின்றன.

ஹைலைட்ஸ்

  • நீண்ட நாட்களுக்கு பின்னர் டெல்லியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது
  • டெல்லி மக்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்
  • ஆலங்கட்டி மழையால் டெல்லியில் வெப்பநிலை குறைந்துள்ளது.
New Delhi:

டெல்லியில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்துள்ள ஆலங்கட்டி மழையை நெட்டிசன்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் காணப்படும் சாலைகளில், ஆலங்கட்டி மழையால் வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து சென்றன.

வாகன ஓட்டிகள் ஆலங்கட்டி மழையை புகைப்படம், வீடியோ எடுத்து ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வைரலாக்கியுள்ளனர். 
 

கபீர் தனேஜா என்பவர், 'டெல்லியில் ஆலங்கட்டி மழை. நீண்ட நாட்களாக இதுபோன்ற ஒன்றை நாங்கள் பார்க்கவில்லை' என்று கூறியுள்ளார். 

திடீர் ஆலங்கட்டி மழையால் தலைநகரில் வெப்பநிலை குறைந்துள்ளது. 

இன்னும் சில மணி நேரங்களுக்கு இதே வெப்பநிலைதான் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்றைக்கு அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரைக்கும்தான் வெப்பம் செல்லும் என்கிறது வானிலை ஆய்வு மையம். 

Listen to the latest songs, only on JioSaavn.com