டெல்லியில் புழுதிக்காற்றுடன் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை! பொதுமக்கள் மகிழ்ச்சி

டெல்லியில் ஆலங்கட்டி மழை பெய்தவுடன், அதனை வீடியோ காட்சிகளாக எடுத்து டெல்லி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆலங்கட்டி மழையால் டெல்லி சாலையில் கிடக்கும் பனிக்கட்டிகள்

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் புழுதிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது
  • மழை பெய்து இதமான வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
  • ஆலங்கட்டி மழை குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன
New Delhi:

டெல்லியில் புழுதிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை இன்று மாலையில் வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

டெல்லி, காஜியாபாத், நொய்டா ஆகிய நகரங்களில் இன்று மாலை 6 மணிக்கு புழுதிக் காற்று வீச ஆரம்பித்தது. அதன்பின்னர் சாதாரணமாக மழை பெய்தது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. 

மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக டெல்லியில் குளிர்ந்த வானிலை காணப்படுகிறது. 

டெல்லியில் ஆலங்கட்டி மழை பெய்தவுடன், அதனை வீடியோ காட்சிகளாக எடுத்து டெல்லி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீட்டில் பூஞ்சட்டி அருகே விழுந்த பனிக்கட்டிகளை ஒருவர் ஆர்வத்துடன் எடுக்கிறார். 
 

Here's how people reacted on the sudden hailstorm on Twitter:

ஒரு ட்விட்டர் பயனாளர்,'என்னால் நடப்பதை நம்ப முடியவில்லை. கோடை வெயில் கொளுத்தும் மேயில் இருக்கிறோம். ஆலங்கட்டி மழை மகிழ்ச்சி அளிக்கிறது. என்ன அழகான வானிலை!' என்று வியந்து கூறியுள்ளார். 

கடந்த மாதம் 30-ம்தேதியும் டெல்லியின் என்.சி.ஆர். பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. தற்போது பெய்திருக்கு மழை டெல்லி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.