This Article is From Oct 02, 2019

பீகாரை தாக்கிய கனமழை வெள்ளம்!! குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு!

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் பேர் வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

பீகாரை தாக்கிய கனமழை வெள்ளம்!! குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு!

பீகார் வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 40-யைத் தாண்டியுள்ளது.

Patna:

பீகாரில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் அம்மாநில மக்களை கடுமையாக பாதித்துள்ளது. மழை குறைந்துள்ள நிலையில் குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ள பாதிப்பில் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

மீட்கப்பட்டவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டும் சுமார் 20 லட்சம்பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வெள்ளம் புகுந்துள்ள கிராமங்களில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதாக மக்கள் பரிதவித்து வருகின்றனர். 

பீகாரின் பேரிடர் மீட்பு படையினர் அளித்துள்ள தகவலின்படி வெள்ள பாதிப்புக்கு 40 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

.