Heavy Rain alert for TN - தமிழகத்தில் மழை தொடரும்… 21, 22 தேதிகளில் கனமழை!

Heavy Rain alert for TN- சென்னை மற்றும் சுற்றுப்புறத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
Heavy Rain alert for TN - தமிழகத்தில் மழை தொடரும்… 21, 22 தேதிகளில் கனமழை!

Heavy Rain alert for TN- தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.


தமிழகத்தில் (Tamilnadu) வடகிழக்குப் பருவமழை (NEM) தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், “தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்து 5 நாட்களுக்கு மாநில அளவில் மழை பெய்தாலும், அது லேசனாதகவே இருக்கும். மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் 21, 22 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.
 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................