கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் தேவலா மற்றும் பந்தலூர் பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழைக் காலம் தொடங்கியது முதலே தினமும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்திற்கு மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது. 

வானிலை மையம், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்குப் பருவாக் காற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டி மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,

நீலகிரி, கோவை மவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்,

நாளை வட கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் தேவலா மற்றும் பந்தலூர் பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.