
மற்றொரு வைரலான புகைப்படம் காட்டுத்தீயிலிருந்து தப்பிய கோலா கரடி ஒன்று தீயணைப்பு வீரருடன் நிற்பதைக் காட்டுகிறது.
ஆஸ்திரேலியாவில் மாதக்கணக்கில் நீடிக்கும் காட்டுத்தீ காடுகளை அழித்து மக்களையும் வன விலங்குகளையும் அழித்துள்ளது. கூடுதலான வெப்பமும் பலத்த காற்றும் ஆபத்தான விகிதத்தில் காட்டு தீக்கு வழி வகுத்தன. வோக்ஸ் செய்தியின்படி, தற்போது நிலவும் காட்டுத்தீ 480 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகளை கொன்று 900க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துள்ளது. இந்த பேரழிவினை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் பார்போரின் மனதை நொறுங்கச் செய்து விடுகிறது.
இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வரும் புகைப்படங்கள் இறந்த விலங்கினங்கள், சிவப்பு வானம், புகை நிரம்பிய பகுதிகள் பொங்கி எழும் தீப்பிழம்புகளைக் காட்டும்.
ஆன்லைனில் வைரலாகி வந்த மிகவும் மனதை நொறுக்கும் புகைப்படங்களில் ஒன்று. அடிலெய்ட் ஹில்ஸில் ஏற்பட்ட தீப்பிழம்பால் எரிந்த ஒரு காங்காரு குட்டி
கடுமையான தாகம் தாங்காமல் தண்ணீர் மற்றும் உதவிக்காக மக்களிடம் ஓடிவரும் விலங்குகள்.
என்.ஆர்.எம்.ஏ. இன்ஷூரன்ஸ் படி, கோலா ஒரு தீயணைப்பு வீரருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த புகைப்படம் தண்ணீருக்காக விலங்குகள் அவரை அணுகிய பின்னர் எடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய தீ காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இரத்த சிவப்பு நிறத்தில் வானம் காணப்பட்டது.
The fires in Australia are devastating – and the crisis is still ongoing.
— WWF-UK (@wwf_uk) January 3, 2020
More than 5 million hectares have been burnt, and this number continues to climb – that's the equivalent of one fifth of the entire UK. #AustraliaBushfirespic.twitter.com/jh9ZWQWQei
காட்டுத்தீயினால் கிட்டத்தட்ட 4,000 கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
மற்றொரு வைரலான புகைப்படம் காட்டுத்தீயிலிருந்து தப்பிய கோலா கரடி ஒன்று தீயணைப்பு வீரருடன் நிற்பதைக் காட்டுகிறது.
நியூ சவுத் வேல்ஸில் சுமார் 30 சதவீத காடுகள் எரிந்து விட்டன என்று காட்டுதீயின் சுற்றுச்சூழல் இடர் மேலாண்மை மையத்தின் இணை பேராசிரியர் ஓவன் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீயை அணைக்க தயாராக இருக்கும் ஹெலிகாப்டர்கள்


17 வயதான காலநிலை ஆர்வலர் கிரேட்ட தன்பர்க் இண்ஸ்டாகிராமில் இது குறித்து பதிவு ஒன்றினை குறிப்பிட்டுள்ளார். “ எனது மனம் முழுவதும் ஆஸ்திரேலியா மக்களிடமும் இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
திங்களன்று லேசான மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசியதும் இரண்டு மாநிலங்களில் வீசிய வெப்ப அலை சற்று தணிந்தது. அபாயகராமான வானிலை மீண்டும் திரும்பும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Click for more trending news