மணாலியில் செல்ஃபி எடுக்க முயன்று ஆற்றில் விழுந்த நபர்

ஆபத்தான சம்பவங்களை தவிர்ப்பதற்காக, மழையின் போது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் செல்ல வேண்டுமென மாவட்ட நிர்வாகிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மணாலியில் செல்ஃபி எடுக்க முயன்று ஆற்றில் விழுந்த நபர்

காவல்துறையினரால் மீட்கப்பட்டு நலமாக உள்ளார். (File)


Shimla: 

ஹரியானாவைச் சேர்ந்த 25 வயது சுற்றுலா பயணி ஒருவர் இமாச்சல பிரதேசத்தின் மணாலியில் உள்ள பியாஸ் ஆற்றில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விழுந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் தகவல் கிடைத்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து தவறி விழுந்த லலித் யாதவை மீட்டனர்.

அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆபத்தான சம்பவங்களை தவிர்ப்பதற்காக, மழையின் போது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் செல்ல வேண்டுமென மாவட்ட நிர்வாகிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................