This Article is From Oct 03, 2019

Elections 2019: BJP வேட்பாளர் ஆனார் TikTok பிரபலம் - பரபரக்கும் தேர்தல் களம்!

Haryana Assembly Elections 2019: வரும் அக்டோபர் 21 ஆம் தேதி, ஹரியானா மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளது

Elections 2019: BJP வேட்பாளர் ஆனார் TikTok பிரபலம் - பரபரக்கும் தேர்தல் களம்!

Haryana Assembly Elections 2019: அக்டோபர் 24 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 

Adampur:

ஹரியானா (Haryana) மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அம்மாநில அதாம்பூர் தொகுதியில் பாஜக (BJP) சார்பில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார் டிக்டாக் (TikTok) பிரபலமான சோனாலி போகட் (Sonali Phogat). தனது டிக்டாக் பக்கத்தில் சுமார் 1 லட்சம் ரசிகர்களை வைத்துள்ளார் போகட். 

டிக்டாக் செயலியில் அவர் பாலிவுட் பாடல்களுக்கு வாயசைத்து வீடியோக்களைப் பகிர்வார். சமீபத்தில் அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் வைரல் ரகம்.

போகட், இந்த முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ குல்தீப் பிஷ்னாய்-ஐ எதிர்த்துக் களம் காண்கிறார். குல்தீப்பின் தந்தையான பஜன் லால், 3 முறை மாநில முதல்வராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. போகட், டிக்டாக் செயலியில் பிரபலமாக இருந்தாலும், தேர்தல் களத்தில் காங்கிரஸின் கோட்டையில் வெற்றி காண்பது அவ்வளவு எளிதாக இருக்காது. 

வரும் அக்டோபர் 21 ஆம் தேதி, ஹரியானா மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 24 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 

(With inputs from ANI)

.