பக்ரீத் பண்டியை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

EidAlAdha: தியாகத் திருநாளான இன்று இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி எனப்படும் புனித பலி கொடுக்கின்றனர்.

பக்ரீத் பண்டியை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

EidMubarak: நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மசூதிகளில் கூடி பிரார்த்தனை செய்தனர்.

New Delhi:

நாடு முழுவதும் இன்று உற்சாகமாக பக்ரீத் (Bakrid) பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி (PM Modi) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இஸ்லாமியர்களின் இறைதூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. 

டெல்லி ஜமா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மும்பையில் உள்ள ஹமிதியா மசூதியில், ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தினர். 

Newsbeep

தியாகத் திருநாளான இன்று இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி எனப்படும் புனித பலி கொடுக்கின்றனர். அந்த இறைச்சியில் குறிப்பிட்ட பங்கை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்கின்றனர்.


பக்ரீத் பண்டிகை (Bakrid Festival) உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில்,”பக்ரீத் பண்டிகை அமைதி மகிழ்ச்சியை  சமூகத்தில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

இதேபோல், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, தனது ட்வீட்டர் பதிவில் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "பக்ரித் திருநாளான இந்த நல்ல சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை, பக்தி, நம்பிக்கை மற்றும் தியாகத்தின் நற்பண்புகளுக்கான ஒர் இடமாகும், மேலும் சகோதரத்துவம், இரக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வுகளை இது ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.