செல்ஃபி ஜோன்னாக மாறிவரும் பழங்கால ரயில் நிலையம்!

தற்போது பயன்பாட்டில் உள்ள இப்பாதைகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிப்பதால், சுற்றிலா பயணிகள் உபயோகிக்க ஏதுவாகவும் உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
செல்ஃபி ஜோன்னாக மாறிவரும் பழங்கால ரயில் நிலையம்!

இரயில் தண்டவாளத்திலுருந்து புகைப்படம் எடுக்கும் பயணிகள்


வியட்நத்தில் உள்ள ஹான்நோயி நகரத்தில் அமைந்திருக்கும் பண்டைய காலத்து பிரேஞ்சு ரயில்பாதைகள் இப்போது செல்ஃபி தளமாக  மாறிவருகிறது. அந்த ரயில் நிலையம் தற்போது அங்கு வரும் செல்ஃபி பிரியர்கள் மற்றும் அங்குத் தொடங்கப்பட்டுள்ள உணவகத்துக்கு வருபவர்களால் நிரம்பி வருகின்றது.

புகைப்படங்கள் எடுக்க ரயில்பாதைகள் எவ்வளவு அழகாக தோன்றினாலும், அங்குள்ள குறுகிய சாலைகளால் மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் ரயில் வரும் பாதை என்பதால் ஆபத்து நிறைந்தா பகுதியாக மாறிவருகிறது.

'இரயிலுக்கு அருகே சென்று புகைப்படம் எடுப்பது மிகவும் சுவரசியமாக இருந்தாலும், அதனருகே நிற்பது பயமாக உள்ளது' , என ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுற்றிலா பயணி மீஷேல் ரிச்சார்டிஸ் கூறினார்.  

இந்த வழிதடங்கள் பழைய பிரேஞ்சு ஆட்சியாளர்களால் அமைகப்பட்டவை. இப்பாதைகள் மக்கள் செல்வதர்க்கும், பொருட்கள் கொண்டுவருவதர்க்கும், வியட்னாம், இந்தோ-சீன , லாஓஸ் மற்றும் கம்போடியா மக்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னர், அங்கே நடந்த வியட்னம் போரில் இப்பாதைகள் மிக மோசமாக பாதிக்கபட்டன.

தற்போது பயன்பாட்டில் உள்ள இப்பாதைகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிப்பதால், சுற்றிலா பயணிகள் உபயோகிக்க ஏதுவாகவும் உள்ளது.

ஆனால், இப்போதைய நாட்களில் இவ்விடத்தை செல்ஃபி ஜோன்னாக மாற்றிவருகின்றனர். வீடுகள் மற்றும் உணவகங்கள் இங்கு நிறைந்திருப்பதால் டிராவல் போட்டோகிராஃபர்கள் மற்றும் தொழில் நடத்துவபர்கள் இங்கே வசிக்க தொடங்கியுள்ளனர்.

aa37mi9s

'இந்த இடத்துக்கு ஒரு வசிகர குணமுண்டு, பால்கனிகளில் தொங்கும் பூக்கள், நெருங்கிய பழைய கட்டிடங்கள், வீட்டின் அருகிலேயே இரயில் பாதைகள் என பல விஷயங்கள் ரசிக்கும்படி உள்ளன' என ஹாங்காங்யைச் சேர்ந்த சுற்றிலா பயணி எட் வேர்டு திசிம் தெரிவித்தார்.

'இரயில் வந்த உடனே எனக்கு கிருத்துமஸ் வந்தது போல் தோன்றுகிறது‘ பீரட்டனை சேர்ந்த சுற்றிலா பயணி பாவுல் ஹார்திமன் தெரிவித்தார்

'மேலும், அங்கு இரயில் வரும் பொழுது அங்கு காத்திருந்த மக்கள் உடனடியாக போன்கள் மூலம் புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டனர்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Click for more trending news
லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................