“தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து…”- எச்.ராஜா அறிவிப்பு!!

"அதை பொதுவுடைமையாக்குவது தான் பாஜக எடுக்கும் முதல் நடவடிக்கையாக இருக்கும்"

“தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து…”- எச்.ராஜா அறிவிப்பு!!

"இது குறித்து நான் முன்னரே பேசியிருக்கிறேன். இப்போதும் அதை உறுதிபடுத்துகிறேன்"

தமிழகத்தில் மட்டும் பாஜக ஆட்சி செய்யும் நிலைக்கு வந்தால், எதற்கு முதலில் கையெழுத்திட்டு நடைமுறைபடுத்தும் என்பது குறித்து அக்கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தகவல் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இது குறித்துப் பேசிய எச்.ராஜா, “தமிழகத்தில் மட்டும் பாஜக ஆட்சி செய்யும் நிலைக்கு வருமேயானால், நாங்கள் போடும் முதல் கையெழுத்து, பெரியார் அறக்கட்டளையை பொதுவுடைமையாக்குவதுதான். அது ஒரு தனி மனிதனுக்குச் சொந்தமாக இருக்கக் கூடாது. அது மக்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அதனால், அதை பொதுவுடைமையாக்குவது தான் பாஜக எடுக்கும் முதல் நடவடிக்கையாக இருக்கும். இது குறித்து நான் முன்னரே பேசியிருக்கிறேன். இப்போதும் அதை உறுதிபடுத்துகிறேன்,” என்றார்.

kb4jb3ss

பெரியார் - ரஜினி சர்ச்சையில் திராவிடர் கழகத்தின் செயல்பாடு பற்றி எச்.ராஜா பேசும்போது, “முதலில் இந்த சம்பவத்தில், நாங்கள் அப்படித்தான் செய்தோம் என்று மார்தட்டிக் கொண்டார்கள். ஆனால், இப்போது நாங்கள் அப்படி எதுவுமே செய்யவில்லை என்கிறார்கள். இதில் இருந்து என்னத் தெரிகிறது என்றால், இந்துக்களின் எழுச்சியைக் கண்டு திக அஞ்சுகிறது என்பது உறுதியாகிறது. அவர்கள் தொடை நடுங்கிகளாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது,” என்று கூறினார். 

‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு திராவிட இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ரஜினி. பாஜகவினர் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், திராவிட இயக்கத்தினர் ரஜினி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 
 

More News