அமெரிக்க வாழ் இந்தியர்களை பாதிக்கும் ஹெச்- 1பி விசா விதிமுறை மாற்றங்கள்

ஆய்வு ஒன்றின் படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முடிவால் கிட்டதட்ட 100,000 வெளிநாட்டினர் வேலையிழக்க நேரிடும்

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமெரிக்க வாழ் இந்தியர்களை பாதிக்கும் ஹெச்- 1பி விசா விதிமுறை மாற்றங்கள்

ஹெச்-1பி விசா: பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க தேவைப்படுகின்ற ஷச்-1பி விசா பெறுவதற்கான விதிகளை கடினமாக்கி வருகிறது ட்ரம்ப் நிர்வாகம், இதன் ஒரு பகுதியாக விசா வைத்துள்ளவர்களின் வாழ்க்கைத் துணைகள் வேலை செய்ய அனுமதிக்கும் வசதியை திரும்பப்பெற திட்டமிட்டுள்ளது.

புதிய ஆய்வு ஒன்றின் படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவால் கிட்டதட்ட 100,000 வெளிநாட்டினர் வேலையிழக்க நேரிடும் என்றும் ஹெச்1.பி விசா வைத்திருப்பாவர்கள் மற்றும் அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த சூழலில், டென்னிஸ்ஸி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெ.எல். கன்னிங்ஹாம் மற்றும் லிம்மெரிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூஜா பி. விஜயகுமார் ஆகியோர் இப்படியான கொள்கை மாற்றத்தின் தாக்கத்தை பற்றி ஒரு ஆய்வு நடத்த முடிவு செய்தனர்.

அவர்களின் முடிவில், அது போன்றதொரு மாற்றம் குடும்பங்களை சமூக ரீதியில் தனிமைப்படுத்தி, குடும்பத்திற்குள்ளாக பதற்றத்தை அதிகரித்து அவர்களின் நிதி ஆதாரத்தையும் முடக்கும். இது விசா வைத்துள்ளவர்களின் நிம்மதியையும் குலைத்து, வெளிநாட்டு வேலையில் அவர்கள் சந்திக்கின்ற ஆபத்துக்களையும் அதிகரிக்கும். வெளிநாட்டவர்களை பணி அமர்த்திய நிறுவனங்களுக்கு $250,000 முதல் $1 மில்லியன் (மறைமுக செலவுகள் உட்பட) இருக்கும் என்கின்றனர்.

us flag unsplash

“அமெரிக்கா எடுக்க எத்தனித்திருக்கும் இது போன்றதொரு கொள்கை மாற்றங்கள் பெரும்பாலும், கொள்கை வகுப்பாளர்களுக்கு தேவைப்படுகின்ற முழுத் தகவல்கள் இல்லாத சூழலில் தான் எடுக்கப்படுகின்றன” என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

அமெரிக்கா ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் துணைகளையும் வேலை செய்ய கடந்த 2015ம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அனுமதியளித்தது. இந்த ஆய்விற்காக, ஆசிரியர்கள் 2014ம் ஆண்டில் ஹெச்-1பி விசா வைத்திருந்த குடும்பங்களின் அனுபவங்களைப் படித்தன. இந்த ஆய்வில் பங்கு கொள்ள 1,800 புலம்பெயர்ந்த இந்தியர்களை அழைத்து இறுதியாக 416 பேர் மட்டும் ஆய்வின் மாதிரிகளாக எடுத்துக் கொண்டனர். 

new york skyline unsplash

1952ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வேலை விசா திட்டங்கள் முதலில் அமெரிக்க கம்பெனிகள் தகுதிவாய்ந்த அமெரிக்கர்களை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் தற்காலிகமாக வெளியிலிருந்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்த அனுமதிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன, குறிப்பாக இந்தியாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்கள், விசாவை முறைகேடாக பயன்படுத்தி குறைவான ஊதியத்தில் வேலைக்கு ஆட்களை எடுப்பதாக கூறப்பட்டன. இந்த திட்டங்களை ரத்து செய்து அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்க உறுதியெடுத்துகொண்டு பதவிக்கு வந்தார் டிரம்ப்.

statue of liberty unsplash

அந்த சூழலில் தான், ட்ரம்பின் உள்நாட்டு பாதுகாப்பு துறை, ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் துணைகளை வேலை செய்ய அனுமதிக்கும் தகுதியை நீக்கும் பணிகளை தொடக்கிவிட்டது. அமேசான், கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறை குழுக்களைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த முடிவு, துணைகளை குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் என கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருக்கின்றன.

ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் துணைகள் வேலை செய்யவில்லை என்றால் சந்திக்கும் எண்ணற்ற பிரச்சனைகளைத் தெரிவித்தனர். “நியாயமற்ற இந்த முடிவால் என்னுடைய மனைவி இந்தியா திரும்பச் செல்கிறார்” என ஒருவர் ஆய்வாளர்களிடம் தெரிவித்தார். மற்றொருவர் “என்னுடைய மனைவி மேலும் பணியை தொடர முடியாது என்பதால் விரக்தியடைந்து விட்டார்” என்றார். 

donald trump afp

ஆய்வாளர்கள், மீண்டும் கொண்டு வரப்படும் இந்த தடை “புலம்பெயர்ந்து குடும்பங்களுக்கு 2014ம் ஆண்டில் இருந்ததைவிட மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் முந்தைய குடியேற்ற கொள்கைகளால் தற்காலிமாக பயனடைந்த தனிநபர்கள் இந்த நேரத்தில் சொந்தமாக ஒரு வீடு அல்லது ஒரு தொழில் தொடங்கியிருப்பார்கள்” என்கின்றனர். (हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................