This Article is From Jan 28, 2020

2002 குஜராத் கலவரம்: குற்றவாளிகள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

2002 குஜராத் கலவரத்தின்போது சர்தார்புரா கிராமத்தில் 33 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

2002 குஜராத் கலவரம்: குற்றவாளிகள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

சர்தார்புரா படுகொலை குற்றவாளிகள் 14 பேரும் குஜராத்திற்குள் நுழைய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

New Delhi:

2002 குஜராத் கலவரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 14 குற்றவாளிகளுக்கும் குஜாரத் மாநிலத்திற்குள் நுழைய கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டோர் ஆன்மீகம் மற்றும் சமூக பணிகளில் ஈடுபட உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதேபோல், ஜாமீன் பெற்ற 14 பேரும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்று ஜபல்பூரில் தங்கியிருக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குற்றவாளிகள் ஆன்மீகம் மற்றும் சமூக பணிகளில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் வேலையை ஏற்படுத்தி கொடுக்குமாறும் மாவட்ட நிர்வாகத்திடம் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 

குஜராத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, குஜராத் முழுவதும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில், சர்தார்புரா கிராமத்தில் ஒரே வீட்டில் இருந்த 33 முஸ்லிம்கள் எரித்து படுகொலை செய்யப்பட்டனர். 

குஜராத்தில் தொடர்ந்து, 3 நாட்களாக நடந்த அந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவார்கள். 

.