This Article is From Mar 09, 2019

உலகின் வயதான நபராக 116 வயது ஜப்பான் மூதாட்டி தேர்வு

கேன் டனாகா கடந்த 1903 ஜனவரி 2-ம்தேதி பிறந்துள்ளார். அந்த ஆண்டில்தான் ரைட் சகோதரர்கள் விமானத்தை பறக்க விட்டனர்.

உலகின் வயதான நபராக 116 வயது  ஜப்பான் மூதாட்டி தேர்வு

கேன் டனாகா தினமும் காலை 6 மணிக்கு எழுந்திருக்கிறார். மதிய நேரம் கணக்கு பாடங்களை படிக்கிறாராம்.

ஹைலைட்ஸ்

  • Kane Tanaka was born on 2 January 1903
  • Ms Tanaka still enjoys studying Math practicing calligraphy
  • One of Ms Tanaka's favourite pastime is playing board game - Othello
Tokyo:

உலகின் வயதான நபராக ஜப்பானை சேர்ந்த 116 வயது மூதாட்டி கேன் டனாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்னமும் கணக்கு பாடங்களை படித்துக் கொண்டு, செஸ், கேரம் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்.

கேன் டனாகா குறித்த அறிவிப்பை கின்னர் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் இன்று அறிவித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த கேன் டனாகா கடந்த 1903 ஜனவரி 2-ம்தேதி பிறந்தார். அந்த ஆண்டில்தான் ரைட் சகோதரர்களால் விமானம் பறக்க விடப்பட்டது. 

மேற்கு ஜப்பானின் புகுவோகா பகுதியில் டனாகா வசித்து வருகிறார். கடந்த 1922-ல் அவருக்கு ஹிடியோ என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தன. 5-வதாக ஒரு குழந்தையை அவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர். 

ஜப்பானில்தான் அதிக வயது வரை வாழ்வோர் அதிகம் உள்ளனர். இங்கு முதியோர் இல்லமும் அதிகளவு இருக்கின்றன. முன்னதாக அதிக வயது வரை இருந்த ஜிரோமன் கிமுரா அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர் என்ற பட்டத்தை வைத்திருந்தார். கடந்த ஜூன் 2013-ல் அவருக்கு 116 வயதான போது உயிரிழந்தார்.

அதற்கு முன்பாக 1997-ம் ஆண்டில் 122 வயதான ஜீன் லூயிஸ் என்பவர் 122 -வது வயதில் உயிரிழந்தார். அவர் பிரான்சை சேர்ந்தவர். 

.