இசைப்புயல் ரஹ்மானுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் செலினா கோம்ஸ்!!

”அவருடைய இசையில் பாட அல்லத் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என செலினா கோம்ஸ் தெரிவித்துள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
இசைப்புயல் ரஹ்மானுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் செலினா கோம்ஸ்!!
New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. ரஹ்மான் இன்று ஒரு உலகப் பிரபலம்: செலிபா கோம்ஸ்
  2. செலினா ”இட் அயிண்ட் மீ” & ”கம் அண்ட் கெட் இட்” பாடல்களை பாடியுள்ளார்
  3. ஏ.ஆர். ரஹ்மான பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்

புது டெல்லி: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்தால், செலினா கோம்ஸ் 'இட் அயிண்ட் மீ' (அது எனக்கு இல்லை) என சொல்ல முடியாது. செலினா கோம்ஸ் ரஹ்மானின் பணிகளை பின்பற்றி வருவதாகவும், அவருடைய இசையில் பாட விரும்புவதாகவும் மிட் டே-யிடம் (இந்திய செய்தித்தாள்) தெரிவித்துள்ளார். " எனக்கு ஏ.ஆர். ரஹ்மானின் பணிகள் படிக்கும். அவர் இன்றொரு உலகப் பிரபலம். நான் அவருடைய இசையில் பாட அல்லது அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அதிலும் ஒரு பாலிவுட் திரைப்படத்திற்கு பாடுவது இன்னமும் அழகாக இருக்கும் என நினைக்கிறேன்" என செலினா தெரிவித்துள்ளார். மேலும் அவர் ரஹ்மான் தவிர்த்து மேலும் சில இந்திய இசையமைப்பாளர்களையும் பின்பற்றி வருவதாக தெரிவித்தார். "நான் இந்தியாவில் சில இசையமைப்பாளர்களை பின்தொடர்ந்து வருகிறேன் அவருடைய அற்புதமாக வேலை செய்கிறார்கள் என நம்புகிறேன்" என்றார்.

செலினா கூறியதைப் போல ரஹ்மான் இன்று ஒரு உலகப் பிரபலம் தான். அவர் ஸ்லம்டாக் மில்லியனர், 127 ஹவர்ஸ், மில்லியன் டாலர் ஆர்ம், பீபிள் லைக் அஸ் மற்றும் பீலே: பர்த் ஆஃப் ஏ லெஜெண்ட் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

செலினா கோம்ஸ் டிஸ்னியின் விசார்ட்ஸ் ஆஃப் தி வேவர்லி ப்ளேஸில் நடித்ததன் பிறகு மிகவும் பிரபலமானார். மேலும் அவர் கம் அண்ட் கெட் இட், சேம் ஓல்ட் லவ் மற்றும் ஹாண்ட்ஸ் டூ மைசெல்ஃப் உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

செலினா கோம்ஸ் அனதர் சிண்ட்ரெல்லா ஸ்டோரி, ப்ரின்ஸஸ் ப்ரொடெக்‌ஷன் ப்ரோக்ரேம், மாண்டே கார்லோ, ஸ்ப்ரிங் ப்ரேக்கர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இந்தியாவில் தற்போது மூன்றாவது பாகம் வெளியிடப்பட்டுள்ள ஹோட்டள் ட்ரான்ஸிவேனியா சீரியஸில் பின்னனி குரல் வழங்கியுள்ளார். மார்விஸ் என்கிற கதாபாத்திரத்திற்கு குரலாக உள்ளதைப் பற்றி கூறுகையில், செலினா " அந்த பாகத்திற்கு ஏற்றவாறு என்னுடைய குரலை மாற்றியமைப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது" என்றார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................