தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது: ராமதாஸ்

தொழில்துறை, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் வரி தவிர்த்த அரசின் பிற வருவாய்களை அதிகரிக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட வில்லை.

தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது: ராமதாஸ்

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது - ராமதாஸ்

தமிழகத்தின் கடன்சுமை கட்டுப்பாடின்றி நான்கரை லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, வேளாண்மைதான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை உணர்ந்து கொண்டிருக்கும் தமிழக அரசு, 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்; தென்காசியில் எலுமிச்சை, தூத்துக்குடியில் மிளகாய் மையங்கள் அமைக்கப்படும்; உழவர்களின் ஐயங்களை தீர்ப்பதற்காக உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம்; உழவர் பாதுகாப்புதிட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கவை ஆகும்.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இது எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாகும். மூன்றே கால் மணி நேரம் நீடித்த நிதிநிலை அறிக்கை உரையில் மின்சக்தி, தொழில்துறை, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் வரி தவிர்த்த அரசின் பிற வருவாய்களை அதிகரிக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட வில்லை. தமிழகத்தின் கடன்சுமை கட்டுப்பாடின்றி நான்கரை லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை சீர் கெடுத்து வந்த ஸ்டெர்லைட் ஆலை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புதிதாக ரூ.49,000 கோடி செலவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கக்கூடும். இனி வரும் காலங்களிலாவது இத்தகைய திட்டங்களை கைவிட அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

More News